தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், பிப்- 19. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இடையே இரட்டை ஊதிய முறை ஊதிய பாகுபாட்டை களைந்து உயர் நீதிமன்ற தீர்ப்புப்படி அரசு முறை ஊதியம் வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கரும்பு விவசாயிகள் சங்கம் துரை பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார்.இதில் ஏராளமான சர்க்கரை ஆலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.