தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் பிப் 22 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது
இதற்கான யாகசாலை பூஜை நேற்று வியாழக்கிழமை பிப்ரவரி 19 மாலை 6 மணியிலிருந்து துவங்கியது தேனி மாவட்டத்தில் பழமையும் சிறப்பும் பெற்றது செப்பேடு புகழ் அரிகேசநல்லூர் என்று அழைக்கப்படும் சின்னமனூர் கோவில் மாநகரமான சின்னமனூரில் லட்சுமி நாராயண பெருமாள் திருப்பதியில் கையை கீழ்நோக்கியும் காஞ்சியில் ஆசி வழங்குவது போன்றும் இருப்பார்.
இந்த கோவிலில் சுமார் 10 அடி உயரத்தில் கன்னி தானம் செய்வது போன்ற தான கஸ்த கோலத்தில் நின்றுள்ளார் பெருமாளின் காலடியில் ஆஞ்சநேயர் இருப்பது தனி சிறப்பு அம்சம் ஆகும் பல ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைத்தது அவரை பிரதிஷ்டை செய்ய உத்தேசித்திருந்த நாளில் 80 வயது முதியவர் கோயிலுக்கு வந்து இங்குள்ள பாக்கு மரத்தில் ஏறி ஆவேசத்துடன் கூச்சலிட்டார் அவரை சமாதானம் செய்து கேட்டபோது நான் பெருமாள் காலடியில் இருக்க ஆசைப்படுகிறேன் என்னை இடமாற்றம் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார் எனவே ஆஞ்சநேயரை இடமாற்றம் செய்யாமல் பெருமாள் காலடியிலே வைக்கப்பட்டார்
நோய்வாய்ப்பட்டவர்கள் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் போது அவரது இடுப்பில் துண்டை கட்டி அபிஷேகம் முடிந்த பின் அந்த ஈரத்துண்டை நோயாளியின் உடம்பில் போத்தினால் நோய் குணமாகும் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இத்தனை சிறப்பு பெற்ற இந்த கோவிலில் திருப்பணி கும்பாபிஷேகம் கடந்த 2005 ல் கோலாகலமாக நடைபெற்றது இதன் பின் நடைபெறவில்லை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் திருப்பணிகள் செய்வது கும்பாபிஷேகம் செய்வது அவசியம் ஆகும் ஆனால் இந்த கோவிலில் திருப்பணி கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளாகி விட்டது
இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று செயல் அலுவலர் அ. நதியா அவர்களின் தீவிர முயற்சியால் அறங்காவலர் குழுத் தலைவர் குமரேசன் முயற்சியில் அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் வீரியன் சாமி தவமணி ராமச்சந்திரன் பால்ச்சாமி நாகஜோதி மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் இணைந்து திருப்பணி செய்தனர்
இந்த கோவிலில் பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை பகவத் அனுக்ஞ விஸ்வக்ஸேன பூஜை புண்யா ஹவாசனம் அங்கு ஈர்ப்பனம் வாஸ்து ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகத்தை யொட்டி சின்னமனூர் நகரமே விழாக்கோலம் பூண்டு நகரெங்கும் வீடுகளில் தோரணங்கள் கட்டியும் வணிக நிறுவனங்களில் கும்பாபிஷேகத்தை வரவேற்றும் சின்னமனூர் நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.