தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் உள்ள 5 குடோன்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்களுக்கு இளஞ்சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும், கடந்த 7 ஆண்டுகளாக தற்காலமாக பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரபடுத்த வேண்டும், அனைத்து குடன்களிலும் எதிர்பாராமல் பணியின் போது ஏற்படும் விபத்துகளுக்கு முதல் உதவி பெட்டி வைக்க வேண்டும் மற்றும் தொழிலாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் கழிவறை உள்ளிட்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், கடந்த 15 ஆண்டுகளாக நடத்தாமல் உள்ள சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தற்காலிக பணியாளர்களுக்கு வருகை பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும் 60 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் சுமைதொக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடங்களிலும் உள்ளிருக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.