தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முட்டறையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
தேனி மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழை அளவான 829.80 மி.மீக்கு ஏப்ரல் மாதம் வரை 179.24 மி.மீ மழை பெய்துள்ளது இது இயல்பான மழை அளவைவிட2021 மி.மீ மழை அளவை காட்டிலும் 32.86 மி.மீ மழை குறைவாகும் ஏப்ரல் மாத இயல்பு மழையள வான 90.மி.மீக்கு தற்பொழுது வரை 108.6. மி.மீ மழை பெறப்பட்டு உள்ளது.
இந்த மழை அளவு ஏப்ரல் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 9.8.மி
மீ அதிகமாக மழை பெய்து உள்ளது வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவல தங்களை தொடர்பு கொண்டு தொடர்பு கொண்டு பயனடையலாம் விவசாயிகள் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் மகாலட்சுமி வேளாண்மை இணை இயக்குனர் சாந்தாமணி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்மதி விவசாயம் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள்விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்