தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இ.விளக்கு பகுதி ஒதுக்குப்புறமாக காரில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை அங்கு வைத்து ஆட்டோவில் மாற்றி தென்காசி பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கேரளா கார் நிற்பதாக இலத்தூர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து அந்த இடத்துக்கு விரைந்து சென்ற எலத்தூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கேரளா பதிவு எண் கார் கொண்ட கார் , ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டுவந்தனர்
இதில் கார் உரிமையாளர் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டுவீரத்தில், கும்பல் பகுதியைச் சேர்ந்த ஜலாலுதீன் மகன் சித்திக்(34)ஆட்டோ ஓட்டுனர் தென்காசி பாறையடி தெரு சேர்ந்த சுப்ரமணியன் மகன் மகேந்திரன் ( 21)
ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் கேரளாவில் இருந்து தென்காசி, பகுதிகளுக்கு குட்கா பான்பராக் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது
இதனைத் தொடர்ந்து இலத்தூர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2பேரை கைது செய்தனர் கடத்திவரப்பட்ட121 கிலோ குட்கா வின் மொத்த மதிப்பு 1.25லட்சம் ரூபாய் ஆகும்.கார் , ஆட்டோ உடன் குட்கா பறிமுதல் செய்த சம்பவம் இலத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .