கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிசெய்து வரும் சுமார் 53 பணியாளர்கள் இன்று பணியை புறக்கணித்து நகராட்சி முன்பு காலை முதல் அமர்ந்து பொராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த போராட்டத்தில் ஒப்பந்தப் பணியை ரத்து செய்யவும், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிப்படி நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்

இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அதிமுகவின் தமிழ்நாடு தேயிலைத்தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ. அமீது தலைமையில் அதிமுகவினர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியாரின் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியின் கவனத்திற்கு கொண்டு சென்று உங்கள் கோரிக்கை நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளித்தார்

இந்நிகழ்ச்சியில் வால்பாறை நகர மேற்கு பொறுப்பாளர் சலாவுதீன் அமீது நகர அவை தலைவர் சுடர் பாலு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாரசப்பான், மிச்சர் கடை முருகன், மாணவரணி செயலாளர் லோகேஸ்வரன், இமானுவேல், இரும்பு ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *