செய்தியாளர் வெங்கடேசன்.

காவேரிப்பாக்கம் புதுப்பட்டு பள்ளியில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம் :-

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை தாங்கி பேசியதாவது,

தாய்மொழி ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் போன்றது. அந்த வகையில் நம் அனைவருக்கும் தாய் மொழி தமிழாகும். தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாக கருத வேண்டும். உலக மொழிகளின் முதன்மை அடையாளம் நம் அன்னைத் தமிழ் மொழி தான்.

எனவே தமிழராய் நாம் இருப்பதையும் தமிழில் பேசுவதையும் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும் மாணவர்கள் தாய்மொழி வழியாக கல்வி பயிலும் போது மொழி உணர்வு மேலோங்கி கற்பனை ஆற்றல் மற்றும் அறிவுத்திறன் சிறந்து விளங்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வினை மொழியாசிரியர்கள் வஞ்சி, தனசேகர், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர் மாணவர்கள் ஒன்றிணைந்து தமிழ் என்ற வார்த்தையை உருவாக்கி நிகழ்வில் சிறப்பு சேர்த்தனர்.

இந்நிகழ்வில் முதுகலை ஆசிரியர்கள் கமல் ராமதாஸ் பாக்யராஜ் அனுஷா பிரபாகரன் உமாசங்கர் பட்டதாரி ஆசிரியர்கள் வேதலட்சுமி வெங்கடேஷ் பாக்கியலட்சுமி எழிலரசி பிரமிளா விக்னேஷ் பேபி கிருஷ்ணகுமாரி அமலா ஆய்வக உதவியாளர் ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *