தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், பிப்.21-
நீதிமன்றத்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கம் கூறினார்.
தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் சங்க கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திராவிடச்செல்வன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் அருண்குமார் வரவேற்றார். மாவட்ட முதலாவது கூடுதல் நீதிபதி குமரேசன் 2-வது கூடுதல் நீதிபதி நாகராஜன் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் சிறப்பு கோர்ட் நீதிபதி சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் துணைத் தலைவர் வேலு.கார்த்திகேயன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் மூத்த வழக்கறிஞர்கள் தியாக.காமராஜ், அமர்சிங், நல்லதுரை, பாலகிருஷ்ணன், ராஜேஸ்வரன், சுந்தரமூர்த்தி அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர். பாராட்டுக்கு நன்றி தெரிவித்து முன்னாள் மத்திய மந்திரி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் எனது சீனியர் வழக்கறிஞர் சேதுராமன் அறிவுரை திறமை உழைப்பு வெற்றி என்பது ஆகும். இதைத் தான் இன்றைய இளம் வழக்கறிஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும். வழக்கறிஞர் பணி ஏழைகளுக்கு உதவும் என்பதால் தான் இந்த பணியை தேர்ந்து எடுத்தேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியை பள்ளிகளுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்தேன். அதைத் தவிர இந்த வழக்கறிஞர் சங்க கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தேன். வேறு எந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை நீதித்துறையால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என்று பேசினார். விழாவில் மூத்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முன்னாள் மத்திய மந்திரி பழநிமாணிக்கத்திற்கு சால்வை அணிவித்தனர். முடிவில் தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்க இணைச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.