சென்னை அடுத்த தாம்பரத்தில் பாஜக இளைஞரணி சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது.

போதை பொருட்களை ஒழிக்காமல் தமிழக இளைஞர்களை சீரழிக்க்கும் திமுக அரசுக்கு எதிராக பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் செல்வமுத்துகுமார் தலைமையில் நடைபெற்ற இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஏறாளமானோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராகவும் போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் பதாகைகளுடன் கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மத்திய அரசின் செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சியில் அறை நிர்வாண போராட்டம் நடத்திய காங்கிரசை கண்டித்து ராகுல் காந்தியின் உருவ பொம்மையை காலால் மிதித்து எரித்தனர். இதனால் காவல் துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏறபட்டது.