பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை வடக்கு மாவட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது ” என்ற முழக்கத்துடன் மாபெரும் பரப்பரை கூட்டம்…..
திமுக துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா பங்கேற்பு …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாபநாசம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பரப்பரைக் கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இதில் பாபநாசம் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், குடந்தை மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், மெலட்டூர் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் பாலசுப்ரமணியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் திமுக கழக துணை பொதுச்செயலாளரும் மாநிலங்களவை கழக குழு தலைவருமான திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் தமிழக முதல்வரின் செயல்பாடுகளையும்,5 வருட சாதனைகளையும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கும்பகோணம் மாநகரச் செயலாளர் சு.ப. தமிழழகன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் குட்டி.இரா. தெட்சிணாமூர்த்தி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் ஆனந்த், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி. அய்யாராசு, எஸ்.துரைமுருகன் திருவிடைமருதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், மாநில அயலக அணி துணைச் செயலாளர் இராம. விஜயன், மருது. நடராஜன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி .கண்ணதாசன், துணைச் செயலாளர் ஜெயந்தி ரவிச்சந்திரன், பொருளாளர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதிகள்
இராம.பிரபு, தமிழ்வாணன், பாபநாசம் பேரூர் துணைச் செயலாளர் உதயகுமார் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் பேரூர் செயலாளர் ச.கபிலன் நன்றி கூறினார்.