திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடந்து முடிந்த 14,15 வயது களுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சி இ ஓ விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக்கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை நாம் கூறுகையில் தமிழ்நாட்டில் 15, 19, 23 வயது களுக்கு உட்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். இதற்கு காரணம் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் எதனால் என்றால் எல்லா மாவட்ட அசோசியேசனம் கட்டமைப்பு வசதிகளையும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி விளையாடுவதற்கு உதவுகின்றனர் .
மாநில அணிகளிலேயே ஏழு முதல் எட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் உங்களுக்கே தெரியும் இவர்கள் எப்படி வந்தார்கள் என்பது. இந்த ஆண்டு போட்டியில் தோனி விளையாடுவார்.
விசில் அடிக்க தடை விதித்தது குறித்து கேட்டபோது. அது தொடர்பாக எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என கூறினார். மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடுகிறார்கள் அதனால் தான் மாநில அளவிலான போட்டிகளுக்கு அதிக வீரர்கள் தேர்வாகின்றனர்.
மேலும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் தலைவர் சிவசுப்பிரமணியன் ,செயலாளர் பசுபதி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.