தென்காசி அருகே இலத்தூர்இ.விலக்கு ரவுண்டானாவில் நெல்லை முடநீக்கியல் மருத்துவரகள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பூங்காவின் திறப்பு விழா வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

தென்காசி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூர்
இ.விலக்கு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரவுண்டானா பராமரிப்பு இன்றி புற்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்தன. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதனை பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் TNOACON2026 trust நெல்லை முடநீக்கியல் மருத்துவரகள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி கிளப் ஹோம்வே பிராப்பர்டீஸ் டிசைனர் இன்டீரியர் சார்பில் பராமரிப்பு செய்து பூஞ்செடிகள் நடப்பட்டு பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதது.
இந்த பார்க்கிற்கு வரவேற்பு பூங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வரும் 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்தவிழாவில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி எலும்பியல் துறை தலைவரும், தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங்க தலைவருமான பேராசிரியர் என்.மணிகண்டன், ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் கே.ராஜகோபால் ஆகியோர்
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைக்கின்றனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவ சங் இணை செயலாளர் டாக்டர் எஸ்.மாரிமுத்து. தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி, நெல்லை ஆர்த்தோ கிளப் தலைவர் டாக்டர் ஐவன் சாமுவேல், செயலாளர் டாக்டர் தாமோதரன் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். விழாவில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் டி.ஆர்.எஸ்.முத்துராமன் தலைமையில் நெல்லை முடநீக்கியல் மருத்துவரகள் சங்கம் மற்றும் குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *