வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சித்திரை முழுநிலவு மாநாடு குறித்த துண்டு பிரசுரங்களை பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று வழங்கினர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பை வென்றெடுக்க சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் அணி திருவிழா மாநாடு மாமல்லபுரத்தில் நாளை 11- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற உள்ளது. இந்த மாநாட்டில் சமூக நீதி காவலர் மருத்துவர் ச. இராமதாஸ், இளைஞர்களின் எழுச்சி நாயகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 65 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும், போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு அனைத்து மக்களும் வரவேண்டும் என அழைப்பு விடுக்கும் வகையில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், வியாபாரிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணைச் செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமையில் கடைகள் மற்றும் வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர். அப்போது குடும்பத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணைத் தலைவர் எம்.எம். சண்முகவேல், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்டத் துணைத் தலைவர் பழனி, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் எம். சத்யா ( எ) கலியபெருமாள், வலங்கைமான் பாமக ஒன்றிய செயலாளர் க. அப்பு (எ) ரத்தீஷ்பாபு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.