புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 2026 ஆம் ஆண்டுக்கான நாடக விழா
முருங்கம்பாக்கம் திரௌபதி அம்மன் கோயில் திடலில் 17 – 02 – 2026 முதல் 24 – 2 – 2026 வரை தினமும் ஐந்து நாடகங்கள் என எட்டு நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பாதிகளை சேர்ந்த 40 நாடக கலை மன்றங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு நாடக விழா சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது
கலையரசு அருணாச்சலம் தாரா இவர்களின் நல்லாசியுடன் புதுவை கலை சித்ரா கலைக்குழு வழங்கும் விதை எனும் சமூக நாடகம் புரட்சி இயக்குனர் அருணா கலைமணி இயக்கத்தில் 21 2 2026 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடந்தது
விதை சமூக நாடகத்தில் பங்கேற்ற கலைஞர்கள் முன்னாள் கவுன்சிலர் பிரான்சிஸ்பேட்ரிக் சுதன்ராஜன் அருணா கலைமணி பால்ராஜ் பாலதண்டாயுதம் முத்துக்குமார் வடிவேல்ரமேஷ் காரை கணேசன் பக்தவச்சலம் ராமலிங்கம் ஆனந்து (எ)அய்யனாரப்பன் இவர்களுடன் பல்கலை வித்தகர் தாமரைச்செல்வன்
நட்புக்காக இனமான கலைஞர் தந்தைபிரியன் வளரும் கலைஞர்கள் செய்யதுஅன்வர் கவிஞர் கலை இலக்கியன் நாடக இளந்தென்றல் யாழினிகலைமணி அபினவ்சங்கர் கலை மாமணி ஸ்டெல்லாமரி திமாஷ் கலைத்தென்றல் விஜயலட்சுமி மாலா சரஸ்வதி பிரமிளாமேரி ஸ்ரீதேவி கலை இயக்குனர் மற்றும் நடிகர் ரமேஷ் செல்வராஜ் இசை கலைமாமணி தமிழரசன் தயாரிப்பு நிர்வாகம் கலைவாணன் (காப்பாளர்) ஒப்பனை கலைமாமணி பாண்டீஸ்வரன் மேடை நிர்வாகம் கவிஞர் முரளிதரன் நாராயணன்குட்டி கலைஇலக்கியன் ஆகியோர் பன்முக நாடக கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் சிறந்த நடிப்புத் திறனை வெளிப்படுத்தினர்
இந்த விதை மேடை நாடகத்திற்கு புரட்சி இயக்குனர் அருணா கலைமணி கதை வசனம் இயக்கத்தில் இயற்கை விவசாயம் மருந்தில்லா தானிய விதைகளை பேணிக் காப்போம் மண்ணையும் விலை பொருட்களையும் மருந்தில்லாமல் மக்களுக்கு தருவோம் கேன்சரை என்கின்ற கொடிய நோயை வராமல் தடுப்போம் என்ற நோக்கத்தில் நம்மாழ்வார் உயரிய நோக்கம் பற்றிய சமூக நாடகம் பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று சிறப்பாக நடந்தேறியது
புரட்சி இயக்குனர் அருணாக்கலைமணி கதை வசனம் இயக்கத்தில் அரங்கேறியது