துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் 12/05/2025 அன்று கட்டுமானம் தொழில் அமைப்புகள் சார்பாக துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் மாநில தழுவியை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதில் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க கோரியும்,எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லிக்கற்களின் விலையினை குறைக்க கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க கோரியும், கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கக்கோரியும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கோரியும், 28 சதவீதம் வரை உள்ள கட்டிடப் பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க கோரியும் துறையூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் மற்றும் துறையூர் தொழிலாளர்கள் நல சங்கம், வியாபாரிகள் நல சங்கம் சார்பில் துறையூரில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து முசிறி பிரிவு ரோடு ரவுண்டானாவிலிருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து வட்டாட்சியர் மோகன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் விஜய் ஆகியோரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

போராட்டத்தில் செயலாளர் கே.பிரதீப் ,பொருளாளர் பெரியண்ணன், முன்னாள் மண்டல தலைவர் எஸ்.மணிகண்டன், துணை தலைவர் து.தனபால், கௌரவத் தலைவர் கார்த்திகேயன், முன்னாள் செயலாளர் எஸ்.பி. ஜெயராஜ், இளையராஜா, உள்ளிட்ட பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் வினோத் மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ,தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முத்தையன் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அப்துல்லா சாகிப் உள்ளிட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *