விருத்தாசலம் வட்டத்தில்1434 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம் துவங்கப்பட்டது.
விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று துவக்கி வைத்தார்.
இந்த ஆண்டிற்கான பசலி வருவாய் தீர்வாயம் விருதாச்சலம் வட்டத்துக்குட்பட்ட கம்மாபுரம் குறுவட்டம்,குமாரமங்கலம்,கோ.ஆதனூர்,சொட்டவனம்,கோபாலபுரம்,சு.கீணனூர்,சேப்ளாநத்தம் பெரியாக்குறிச்சி,கீழ்பாதி உய்யகொண்டான்ராவி,கோட்டகம்,கம்மாபுரம் மும்முடி சோழகன் வேப்பங்குறிச்சி உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள கிராம மக்களுக்கு இன்று வருவாய் தீர்வாயம் நடைபெற்றது,
இதில்,வருவாய் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணி ராஜ்,வட்டாட்சியர் அரவிந்தன்,துணை வட்டாட்சியர் கோவிந்தன்,மண்டல துணை வட்டாட்சியர் அன்புராஜ்,தேர்தல் பிரிவு வட்டாட்சியர் விஜயா,சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வமணி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.