முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றியம் மற்றும் நகர் கழகம் சார்பில் பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா

அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ, முனியசாமி அவர்கள் தலைமையில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலளர், செந்தில்குமார் அவர்கள் ஏற்பாட்டில் விளங்குளத்தூர் கிராமத்தில் உள்ள பசும்குடில் காப்பகத்தில் உள்ள வயதான பெரியவர்கள், ஆதரவற்றவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம் மற்றும் நகர் கழகம் சார்பில் சுப்பிரமணியர்சுவாமி ஆலயத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு பொது மக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே ஆபரேஷன் சிந்தூரில் விர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ஜவான் முரளி நாயக்கின் தியாகத்தை போற்றி வணங்கி அவரின் திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வுகளில் மாவட்ட விவசாய அணி செயலாளர் சண்முகபாண்டியன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர், முத்துவேல் அவர்கள் முதுகுளத்தூர் நகர பொருப்பாளர் குருசாமி, முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், இராஜசேகர், மாவட்ட பிரதிகள் நாரயணன், தர்மர், கீழக்கன்னிசேரி கிளைச் செயலாளர் கந்தன், கணேஷ்,, ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் குருவராஜன் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் சதீஸ் கண்ணன், மற்றும் முதுகுளத்தூர் மத்திய ஒன்றியம், நகர் கழக பொருப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *