வேப்பூர் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது-
தனித்துணை ஆட்சியர் தங்கமணி கோரிக்கை மனுக்கள் பெற்றார்
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டத்தில் 1434 ஆம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி இன்று தொடங்கியது
வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியருமான தங்கமணி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்
வருவாய் தீர்வாயம் எனப்படும் 1434 ஆம் பசலிக்கு ஜமாபந்தி முதல் நாளான நேற்று வேப்பூர் வட்டத்துக்குட்பட்ட நல்லூர் நகர் வண்ணாத்தூர் மேமாத்தூர் ஏ, சித்தூர் சாத்தியம் இலங்கியனூர் வலசை பிஞ்சனூர் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடைபெற்ற இன்று வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது மாவட்ட தனித்துணை ஆட்சியர் தங்கமணி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார்
இந்நிகழ்வில் வேப்பூர் வட்டாட்சியர் செந்தில் வேல் சமூக நல வட்டாட்சியர் மோகன், ஜமாபந்தி மேலாளர் அன்பழகன் துணை வட்டாட்சியர் ஜார்ஜ் பெர்னான்டோ
மண்டல துணை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, வட்ட தலைமை நில அளவையர் ராமகிருஷ்ணன் வருவாய் ஆய்வாளர்கள் வேப்பூர் ராஜவேல் சிறுபாக்கம் தியாகராஜன்,
கிராம நிர்வாக கலையரசன், ராஜாமணி ராஜீவ், ரவிக்குமார், ஜெயகோபி, ராகுல், பிரியா, மணிமொழி மற்றும் வேளாண்துறை தீயணைப்பு துறை ஊரக வட்டார வளர்ச்சிதுறை காவல்துறை மின்சாரதுறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் 9 கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்