இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்
திருவாரூரிலிருந்து எட்டுக்குடிக்கு ரதயாத்திரை
நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலமான எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவில் முக்கிய நாளான காவடி உற்சவம் நடைபெற்றது.
சித்ராபௌர்ணமியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து முருகனை வழிபட்டனர். இதில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேர் போன்ற அமைப்பில் 14 அடி உயரத்தில் சிறிய ரதம் செய்து திருவாரூர் விஜயபுரம் ஐநூற்று பிள்ளையார் கோவில் ஆலயத்திலிருந்து பக்தர்கள், சிறுவர்கள் பாதயாத்திரையாக ரதத்தை இழுத்து சென்று எட்டுக்குடியில் முருகனை தரிசனம் செய்தனர்.