கிருஷ்ணகிரி அருகே உள்ள பூவத்தி கிராமத்தில் எழுத்தருளியுள்ள
ஸ்ரீ கனகதுர்காதேவி திருக்கேவில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் நல்ல மழை பெய்ய வேண்டி சுதர்ஷன யாகம் மற்றும் அம்மனுக்கு
பாலாபிஷேகம் செய்து வழிப்பட்ட கிராம மக்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வந்த நிலையில் இவர்களின் முன்னோர்கள் வழிப்பட்டு வந்த
ஸ்ரீ கனகதுர்கா தேவி கோவில் பூவத்தி கிராமத்தில் உள்ளது, சிறிய அளவில் காணப்படும் இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி பூஜைகள்,துர்கா அஷ்டமி உள்ளிட்ட பல்வேறுப் பூஜைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருப்பதால் மழை இன்றி நீர்நிலைகள் வறண்டுக் காணப்படுவதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த வெயிலின் கோரப் பிடியில் இருந்து மக்கள் விடுபட வேண்டி ஸ்ரீ கனகா துர்க்கா தேவி திருக்கோவிலில் நல்ல மழை பெய்ய வேண்டி சுதர்ஷன யாகம் மற்றும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைப்பெற்றது.


கோவில் நிர்வாகி திருமதிசுஜதா ஆனந்த பத்மநாபா தலைமையில் நடைப்பெற்றது யாகத்தில் லட்சுமி நாராயணா ஹோமம்,மகா சுதர்ஷன ஹோமம், தூர்காஹோமம், கணபதி ஹோமம், ஆகிய யாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்துக்கொண்டு வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது.இந்த பூஜையின் முக்கியமாக உலக அமைதி வேண்டியும், உலக நன்மை, வேண்டியும், வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்கும் வகையில் நல்ல மழை வேண்டி
சிறப்பு யாகம் நடந்தப்பட்டது.


இதனைத் தொடர்ந்து,நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனை சாந்தப் படுத்தி நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டி பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்,


இதனை அடுத்து ஶ்ரீ கனகா துர்கா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாதரனைகளும் நடைப்பெற்றது, இந்த சிறப்பு பூஜையில் பெங்களுரில் இருந்து மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்

பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.அதே போல இந்த கோயிலின்கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறும் என சுஜதா ஆனந்த பத்மநாபா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *