வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் திரு அவதாரம் தினம் மற்றும் சித்ரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் திருஅவதாரம் தினம் மற்றும் சித்ரா பௌர்ணமி பூஜையை முன்னிட்டு மாலை 5- மணிக்கு தொடங்கி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் உபயதாரர் பாடகச்சேரி Forest Dept Retd பழனியப்பன் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முதல் நாள் பாடகச்சேரி ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் திருஅவதாரம் தினம் மற்றும் சித்ரா பௌர்ணமி 12- ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மாலை 4- மணிக்கு தொடங்கி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலை அருகாமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *