கொடைக்கானல் அட்மா திட்டத்தின் கீழ் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா K.C. பட்டி ஊராட்சி கோரன் கொம்பு பகுதியில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு பழப்பயிர்களில் ஒருங்கிணைந்த உரமேலாண்மை மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றி பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்ச்சியில் பழவகைகள் சாகுபடி,மாற்று பழ பயிர்கள் சாகுபடி, நோய் தாக்குதல்கள், அரசின் மானிய விலை இயந்திரங்கள் பெறுதல், அக்ரிஸ்டாக் பதிவு, பி.எம். கிஷான் ஆகியன பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.
இதற்கு வன உரிமைக்குழு தலைவர்.சங்கர் தலைமை தாங்கினார்.கார்த்திகேயன்-அட்மா திட்ட மேலாளர் வரவேற்புரையுடன்,பயிற்சி வழங்கிய தோட்டக்கலை ஆராய்ச்சி தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர். ரவீந்திரன் , உதவி பேராசிரியர்.மணிவண்ணன் தமிழ்நாடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி மேலாளர்.சிவகுமார் தோட்டக்கலைத்துறை.வன உரிமை குழு உறுப்பினர்.மாலா,ஆண்டிபட்டி ஆரோக்கிய அகம் திட்ட ஒருங்கிணைப்பாளர். சதாசிவம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.