திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் தலைமையில் பாக நிலை முகவர்கள் (பிஎல்ஏ2), பாக குழு உறுப்பினர்கள் (பிஎல்சி) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் கலந்து கொண்டு, ஆட்சி அமைக்க பாக நிலை முகவர்கள்,பாக குழு உறுப்பினர்கள் தான் மிக முக்கியமானவர்கள்.நீங்கள் தான் வாக்காளர்களிடம் திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மீண்டும் திமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் (முன்னாள் மாவட்ட சேர்மன்),மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார்,முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், பொது குழு உறுப்பினர் பூபதி, கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ஆதனூர் ரவிச்சந்திரன்,ஒன்றிய பொருளாளர் நடுவலூர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வகுமார், முருகேசன், சுபாஷ் மற்றும் ஐடி விங் சேகர், மீசை பாலு,உமாபதி ,வழக்கறிஞர் ஆதி , ஷேக் முகமது ,குன்னுப்பட்டி செல்வராஜ்
மற்றும் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுராபுரி, கொல்லப்பட்டி ,ஆதனூர், பகளவாடி திமுக நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்