திருவொற்றியூர் ஜோதி நகர், சத்தியமூர்த்தி நகர்,முல்லை நகர், சக்தி கணபதி நகர் சிவசக்தி நகர், அம்பேத்கர் நகர் அண்ணாமலை நகர்,போன்ற பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இந்நிலையில் கடந்த சில தினங்களாக அடிக்கடி இப்பகுதியில் இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது.
இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் நேற்று இரவு மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு
இருள் சூழ்ந்தது.பல மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின் துண்டிப்பை கண்டித்து சத்திய மூர்த்தி நகர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார் மின்துறை அதிகாரிகளிடம் பேசி மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதையடுத்து கவுன்சிலர் எம்.எஸ்.திரவியம் முன்னிலையில் மின்வாரிய அதிகாரிகள் பழுதான மின்மாற்றி சரி செய்யபட்டு பல மணி நேரத்திற்கு பின் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.