ஒடைப்பட்டி அருகே கிராம மக்களுக்கு பட்டா வழங்கிய எம் எல் ஏ தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மேல பட்டியில் ராயர் குலகுறும்பா சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட திருமண மண்டபத்திற்கு பல வருடங்களாக பட்டா வழங்காமல் இருந்ததை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் என். ராமகிருஷ்ணன் முறையிட்ட சமுதாய மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க கோரியதையடுத்து திருமண மண்டபத்திற்கு பட்டா வழங்கப்பட்டது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மேலப்பட்டியைச்சேர்ந்த குலகுரும்பா சமுதாய பெரியோர்கள் பொன்னாடை போர்த்தி தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்