தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
திருக்காட்டுப்பள்ளி, மே- 14. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழா, அன்னையின் சிறப்பு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு அருட்தந்தையர் நிறைவேற்றினர்.
காலை 6.00 மணிக்கு பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தையர் லூர்துசேவியர், இராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்பட்டது.
மாலை 6.00 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமை ஏற்று கூட்டுப்பாடல் திருப்பலி மறையுரையாற்றி, ஆசி வழங்கி, இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கிவைத்தார்.
ககூடியிருந்த மக்கள் பூண்டி மாதாவே வாழ்க, அன்னையே வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். தேர் பவனியில் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மைக்குரு எம்.பிலோமின் தாஸ் மற்றும் மறைமாவட்ட பொருளாளர் ஜெ.அந்தோனி ஜோசப், மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பிஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.ஜான்கொர்னேலியுஸ், எஸ்.ஜெ.செபாஸ்டின், ஆன்மீக தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோஸப், சுற்றுவட்ட பங்கு குருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தொடந்து வாணவேடிக்கைகள் நடைபெற்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்திருந்தனர். நாளை வியாழக்கிழமை (மே.15) காலை 6.00 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி பூசை நடைபெற்றது. மாலை கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது .