திருவாரூர் மாவட்டம் குடவாசல் உட்கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள கப்பலுடையான், அஸ்கானோடை சாலை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் சாலை ஓடுதளம் சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் அனைத்து விதமான பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் உள் தணிக்கை செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி திருச்சி நெடுஞ்சாலை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையில் கப்பலுடையான், அஸ்கானோடை சாலை பணிகளின் தரம், அளவீடுகள் மற்றும் வடிவியல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது திருவாரூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் இளம்வழுதி, தஞ்சை நபார்டு மற்றும் கிராம சாலை கோட்ட பொறியாளர் சரவணன், திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் ஜெயராமன், புள்ளம்பாடி உதவி பொறியாளர் சரவணகுமார், குடவாசல் உதவி கோட்ட பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் பழனியப்பன், உதவி பொறியாளர் நவீன்குமார் மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.