திருவாரூர்,பிப்ரவரி.25-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் மக்கள் விரோத புதிய சட்டத்திருத்த மசோதா (VB-G,RAM-G) கொண்டு வந்ததைத் திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்க்கு மாவட்டத்தலைவர் ஆறு.பிரகாஷ் வகித்தார்,அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான
எம்.சின்னதுரை போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை விளக்கி பேசி சிறப்புரையாற்றினர்.
முன்னதாக மாவட்டச்செயலாளர் பி.கந்தசாமி, தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் கே.தமிழ்மணி உள்ளிட்ட மற்றும் பலர் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் வி.ராஜாங்கம்,என்.பாலையா மற்றும் திருவாரூர் ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், திருவாரூர் நகர செயலாளர்
என்.பாலசுப்ரமணியன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்,விவசாய தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புச் சட்டத்தினை சிதைக்கின்ற முயற்சியில் புதிய சட்டத்திருத்த மசோதா (VB-G,RAM-G) ஒன்றிய கொண்டு வந்ததைத் திரும்ப பெற வேண்டும், திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு 60 சதவீதம் மாநில அரசு 40 சதவீதம் என்று மாநில அரசுகளின் மீது நீதிச் சுமையை ஏற்றுவதை கைவிட வேண்டும், 2026-27ம் ஆண்டிற்கு ஊரக வேலைத்திட்டத்திற்கு குறைந்த பட்சம் 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய் வேண்டும்,200 நாட்கள் வேலையும், 700 ரூபாய் தினக்கூலியும் வழங்கி நூறு நாள் வேலைத்திட்டத்தை பாதுகாத்திட வேண்டும்,விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை மற்றும் நலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.