பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜா உடனுறை அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய 136-வது ஆண்டு தேரோட்டத்தை நூற்று 100-க்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்

புதுச்சேரி அடுத்த பிள்ளை சாவடி ஸ்ரீ தர்மராஜர் உடனுறை ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 136-வது பிரமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து பகாசூரன் வதம், திருக்கல்யாணம் மற்றும்அம்மனுக்கு பல்வேறு அபிஷேக் ஆராதனைகள் நடைபெற்றது.

6-வது நாள் உற்சாகமான திரௌபதி அம்மனின் திரு தேரோட்டம் நடைபெற்றது கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்ட திரௌபதி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்க 100-க்கனக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தேரானது முக்கிய விதிகள் வீதி உலா வந்து மீண்டும் கோவில் பிரகாரத்தை வந்தடைந்தது.தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.

தேரோட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ஊர் முக்கிய பிரமுகர் பெருமாள், காங்கிரஸ் கட்சி நிர்வாகி முகுந்தன்,வன்னியர் பேரியக்கம் நிறுவனர் செந்தில் கவுண்டர், மணக்குளவிநாயகர் கல்லூரியில் செயலாளர் டாக்டர் கே நாராயணசாமி
உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்துள்ளார்கள்.

ஆலய வளாகத்தில் 2000 மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானத்தை மணக்குள விநாயகர் கல்லூரியின் செயலாளர் டாக்டர் கே. நாராயணசாமி
தலைமையில் அவரது ஏற்பாட்டில் நடைபெற்றது.. மேலும் நிகழ்ச்சியில் குமரேசன், கோபி, வேலு ,சங்கர், செல்வராஜ், ரகுபதி, ஜெய்சங்கர், ஜெயச்சந்திரன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *