பெரம்பூரைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 61, வியாசர்பாடியில் இருந்து, மினி வேனில், பாமாயில் ஏற்றிக் கொண்டு, நேற்று மாலை, திருவொற்றியூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
தேரடி, கணக்கர் தெரு வழியாக அதிவேகமாக வந்த மினிவேனில், சாலையோரம் தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளை சிக்கியதால், மினிவேனின் முன்பக்க கண்ணாடி சுக்குநுாறாக உடைந்தது.
சில அடி துாரம் இழுத்து செல்லப்பட்ட மரக்கிளையால், மரம் அடியோடு முறிந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து முடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள், மாநகாட்சியினர், மரம் வெட்டும் கருவிகளைக் கொண்டு, மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின், போக்குவரத்து சீரானது. திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்