திருவொற்றியூர்

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 47 இவருக்கு மனைவி பெயர் சங்கீதா வயது 40 மற்றும் மகன் பெயர் குமரன் வயது 17 இருக்கும் நிலையில் இவர் அதிகாலை சிறிய வகை பைபர் போர்டில் மீன் பிடிக்க சென்ற நிலையில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய போது கரையில் காற்றின் வேகத்தில் படகு கவிழ்ந்ததில் சுப்பிரமணி மயக்கம் அடைந்த நிலையில் அவரை அவருடைய மகன் மற்றும் சக மீனவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் நிலைமை மோசமாக இருந்ததை கண்டு மருத்துவர்கள் அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழப்பு இதனை அடுத்து உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மீனவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *