குழந்தை மாணவர்கள் ஒருங்கிணைத்த மினி மார்வல்ஸ் அறிவு சார் திறன் கண்காட்சி
மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில், இரண்டரை வயது முதல் ஐந்து வயதிலான குழந்தைகள் மொழி,கலாச்சாரம்,ஆரோக்கிய உணவு குறித்து கூறி கவனம் ஈர்ப்பு
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா சர்வதேச பள்ளியில் பள்ளி குழந்தைகளின் அறிவு சார் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக மினி மார்வல்ஸ் எனும் கண்காட்சி நடைபெற்றது…
முன்னதாக கண்காட்சியை சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் தாளாளார் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் இணை நிர்வாக இயக்குனர் அனீஷ் குமார்,சுகுணா இண்டர்நேஷனல் பள்ளி இணை நிர்வாக இயக்குனர் சாந்தினி,பொறுப்பாளர் லட்சுமி ராமநாதன்,சுகுணா ராக் வி பள்ளி இயக்குனர் அந்தோணி ராஜ்,பள்ளி முதல்வர் பத்மாவதி பஞ்சாபகேஷன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
சிறு குழந்தை பருவம் முதலே ஆரோக்கிய உணவு,போக்குவரத்து விதிகள்,மொழி ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு கலை மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ளும் விதமாக நடைபெற்ற மினி மார்வல்ஸ் கண்காட்சியில் கே.ஜி. எல்.கே.ஜி,மற்றும் யூ.கே.ஜி,பயிலும் குழந்தைகள் பல்வேறு விதமான மாதிரிகளை காட்சி படுத்தி அது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்..
மூன்று நாட்கள் நடைபெற உள்ள கண்காட்சியில், சிறு குழந்தைகளின் அறிவுசார் திறன்களாக சிந்தித்தல், கற்றல், நினைவாற்றல், கவனிப்பு மற்றும் பிரச்சனை தீர்க்கும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கி அது குறித்து விளக்கங்களை குழந்தைகளே அளித்தனர்..
கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவர்கள்,பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டு வியந்தனர்..