விஷவாயுத்தாக்கி பலியான தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கிய மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்ததாரரிடம் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. இவர் நேற்று ஆதிபராசக்தி நகர் பகுதியில் கழிவு நீரை பம்பு செய்து வெளியேற்றக்கூடிய பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது விஷவாயுத்தாக்கி பாதாள சாக்கடை குழிக்குள் சரிந்து விழுந்தார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் ராஜா இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தது அடுத்து பிரேத பரிசோதனைக்காக ராஜாவின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனை அடுத்து இன்று ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் அப்போது அவர் குடும்பத்தினர் ராஜாவின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் குடியிருப்பதற்கு வீடு வழங்க வேண்டும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இன்று மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்த கூட்டம் நடைபெற்றது
அதனை முடித்துக் கொண்டு வந்த மாநகராட்சி மேயர் ஜெகன் ராஜாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பிரியங்கா உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் உங்களது கோரிக்கை என்ன என்று கேட்டு அறிந்தனர் அப்போது அவர்கள் எங்களுக்கு நிவாரண தொகை வேண்டும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதால் குடியிருக்க வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா ஒப்பந்ததாரரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பேசி அந்தத் தொகையை 30 லட்ச ரூபாயை விஷவாயு தாக்கி பலியான குடும்பத்தினரிடம் மேயர் ஜெகன் வழங்கினார்
மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படுவதாகவும் அந்த கடிதத்தில் கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் ராஜாவின் குடும்பத்திற்கு ஒரு வீடு வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்பப்பட உள்ளது. இதனை அடுத்து மாநகராட்சியில் முற்றுகையிட்டு இருந்த விஷவாயுத்தாக்கி பலியான ராஜாவின் குடும்பத்தினர் அங்கு இருந்து சென்றனர்
மேலும் இது பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு விஷவாயுத்தாக்கி பலியான ராஜாவின் குடும்பத்திற்கு நாங்கள் கேட்ட தொகையை வழங்கி உள்ளனர் மேலும் நெல்லையில் வீடு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்று தெரிவித்தனர். அப்போது உடன் ஆணையர் பிரியங்கா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்