கோவை அரசு கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) தமிழ் உயராய்வுத் துறை சார்பில், பேராசிரியர் ராசு மற்றும் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவு கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் மெ.இரா.எழிலி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.பூங்கொடி தலைமை வகித்தார். முன்னதாக, உதவிப்பேராசிரியர் முனைவர் மொ.ரவிக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் திரு.கா.சு.வேலாயுதம் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புச் சொற்பொழிவு:
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, ‘சொல்லின் செல்வர்’ சிந்தனைக்கவிஞர் டாக்டர் கவிதாசன் (இயக்குநர், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்) அவர்கள் “வெற்றி உன் கையில்” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
அவர் தனது உரையில், மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி குறித்து உத்வேகம் அளிக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, உதவிப்பேராசிரியர் முனைவர் சு.சீத்தாராமன் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் நிறைவுற்றது. இவ்விழாவில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.