கோவையில் 22 வது வெங்கடேசலு நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது..
மாணவர் மற்றும் மாணவியருக்கான இப்போட்டி 14 வயதுக்கு கீழ் மற்றும் 19 வயதுக்கு கீழ் என இரு பிரிவுகளாக நடைபெற்றது கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் பிரிவில் 64 அணிகளும், மாணவியர் பிரிவில் 34 அணிகள் என கலந்து கொண்டன..
நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி நடைபெற்ற இதில்,இறுதி போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில்,விஸ்வேஸ்வரா பள்ளியும்,மாணவர் பிரிவில் சுகுணா ரிப் வி பள்ளியும் முதலிடம் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.
இதே போல 19 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் விவேகம் அணியும்,மாணவர் பிரிவில் ஏ.பி.சி. அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,சுகுணா குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
இதே போல சிறந்த வீரர்,வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சுகுணா லட்சுமி நாராயணசாமி,சாந்தினி அனீஷ்குமார்,பள்ளி இயக்குனரும் முதல்வருமான ஆண்டனி ராஜ்,தலைமையாசிரியர் லீனா நிரோசின் ,நிர்வாக அலுவலர் உமாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.