எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் செயல்பட்டு வரும் ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ மாணவிகளிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது ஒரு வார காலத்திற்கு தினம்தோறும் ஒரு நிகழ்ச்சி நடத்தினர்
அதில் விழிப்புணர்வு ஓவியப்போட்டி, விழிப்புணர்வு ஸ்லோகன் எழுதும் நிகழ்வு, விழிப்புணர்வு பேச்சு, போதை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளை பள்ளியில் செயல்பட்டு வரும் போதை எதிர்ப்பு மன்றத்தின் மூலம் அவ் அமைப்பின் ஒருங்கிணைப்பு முதுகலை ஆசிரியர் வி. முருகபாண்டியன் ஏற்பாட்டில்,நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் என். துளசிரங்கன், டி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். முரளிதரன் அனைத்து நிகழ்ச்சிகளையும் துவக்கி வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர் ஜி. ரங்கநாதன் உடற்கல்வி ஆசிரியர்கள் டி.முரளி, பி. மார்கண்டேயன், எஸ். சக்திவேல் மற்றும் போதை எதிர்ப்பு மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.