திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கடைவீதியில், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102- வது பிறந்த நாள் விழா மற்றும் 4- ஆண்டு கழக ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சாத்தனூர் மணி அனைவரையும் வரவேற்று பேசினார்.
மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் தாட்கோ தலைவர் நா. இளையராஜா, சி.ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர் வி. பிரிதிவிராஜன், வலங்கை நகர செயலாளர் பா. சிவநேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மாங்குடி ஏ.எஸ். குமார், எஸ். கல்யாணசுந்தரம், பி.தாகீர்அலி, ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.கேசவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.கோபால், என்.ஞானசேகரன், அமுதா தமிழரசன், ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கே. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம். மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழக பேச்சாளர் எஸ்.அகிலன், தலைமை கழக இளம் பேச்சாளர் செல்வி சிந்துநதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பஞ்சு. இரவிச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.