சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து அனைவரும் கைத்தறி துணிகளால் நெய்யப்பட்ட மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து “மீண்டும் மஞ்சப்பை ” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடங்கப்பட்டு அனைவருக்கும் கைத்தறி துணிகளால் செய்யப்பட்ட மஞ்சள் பைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார்,
திருவாரூர் மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் நடனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளியின் பெயர் அச்சடிக்கப்பட்ட மஞ்சள் பைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் ஆசிரியர்கள் சூரியகுமார், ரேணுகா, விஜயகுமாரி, ராமமூர்த்தி, இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.