தேனியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முதற் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியர் புதிய அலுவலக கூட்ட அரங்கில் தமிழக முதல்வரின் முகவரி துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் இடத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முதற் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஜ. மகாலட்சுமி தலைமையில் நடைபெற்றது
அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை செயல்படுத்தி அரசின் சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல்லாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடும் அணுகும் அரசு துறைகளில் சேவைகளை திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்குவது இத் திட்டத்தின் நோக்கமாகும் மேலும் நகர்புறங்களில் நடைபெறும் முகாம்களில் 13 துறைகள் மூலம் 43 அரசின் சேவைகளும் ஊரகப் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் 15 துறைகளின் மூலம் 46 அரசின் சேவைகளும் வழங்க முகாம்கள் நடத்தப்பட உள்ளன
இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று முகாம் நடைபெறும் நாள் இடம் குறித்த விவரங்கள் வழங்கப்படவுள்ள அரசு துறைகளின் சேவைகள் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி அவற்றில் பயன் அடைவதற்கான தகுதிகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது
இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் சந்திரா முருகையா உதவி இயக்குனர் ஊராட்சிகள் கிறிஸ்டோபர் தாஸ் உதவி இயக்குனர் பேரூராட்சிகள் சாந்தி தனித்துணை ஆட்சியர் நகராட்சி ஆணையாளர்கள் சின்னமனூர் கோபிநாத் கம்பம் உமா சங்கர் பெரியகுளம் தமீஹா சுல்தானா போடிநாயக்கனூர் எஸ் பார்கவி உள்பட பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் நகர்ப்புறம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.