அரியலூரில் நடந்தது அரியலூர் கட்டுமான பொறியாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேர்ப்பு விழா அரியலூர் வெங்கடேஸ்வரா ஹோட்டலில் நடந்தது சாசன தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார் அழகு தாசன் அனைவரையும் வரவேற்று பேசினார் விஸ்வநாதன் செயல் அறிக்கை வாசித்தார்
புதிய நிர்வாகிகள் தலைவர் பொறியாளர் அறிவானந்தம் செயலாளர் பொறியாளர் நாகமுத்து பொருளாளர் பொறியாளர் கார்த்தி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி முன்னாள் மாநில செயலாளர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார் முன்னாள் திருச்சி சங்கத் தலைவர் சோமசுந்தரம் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் முன்னாள் மண்டல தலைவர் மார்ட்டின் செயற்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் மாநில முன்னாள் துணைத் தலைவர் சிவக்குமார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுகுமார் செந்தில் ஆறாமிர்தம் தமிழ்மாறன் முன்னாள் மண்டல தலைவர் ராமசாமி தமிழ்மாறன் கீழையூர் பள்ளி தலைமையாசிரியர் சரவணராஜா அருள் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்துறை வழங்கினார்கள் விஸ்வநாதன் ஆண்டு அறிக்கை வாசித்தார் அறிவானந்தம் ஏற்புரை ஆற்றினார் செயலாளர் நாகமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார் புதிய நிர்வாகிகளுக்கு ஏராளமானோர் சால்வைகள் சந்தன மாலை துண்டுகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள்