தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், ஜூலை- 6. தஞ்சாவூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மூப்பனார், சுதாகர் மூப்பனார், பி.எல்.ஏ. சிதம்பரம், என்.ஆர். ரங்கராஜன், என்.ஆர். நடராஜன், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த கூட்டத்தில் சிறப்பு விருந்தாக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில். தமிழகத்தை உலுக்கிய ஒரு மிகப்பெரிய வேதனையான பிரச்சனை சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம். காவல் துறையினுடைய மனிதாபிமான அற்ற செயல்பாடு, காட்டுமிராண்டித்தனமான செயல்பாடு, அத்துமீறிய செயல்பாடு காரணமாக காவலாளி அஜித்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையை தன்வசம் தான் முதலமைச்சர் உள்ளது என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அப்படி என்றால் தமிழக அரசு அவருடைய பலவீனத்தின் அடிப்படையிலே காவல்துறையினர் அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது என்பது மிகுந்த வேதனைக்கும், வருத்தத்துக்குரிய ஒரு விஷயம். தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருந்தாலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரையிலே திருபுவனம் காவலாளி மரணத்திலே ஏதோ அவிழ்க்க முடியாத முடிச்சு இருக்கிறது. அந்த முடிச்சை போட்ட அதிகாரி யார்? என்பது இன்று வரை கேள்விக்குறியாக இருக்கிறது.
அதன் அடிப்படையிலேயே தான் இந்த கொடுமையான சம்பவம் நடந்திருக்கிறது. முழுமையான விசாரணை மூலம் முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும். அப்படி என்றால் தான் உண்மை நிலை வெளிவரும். இறந்த காவலாளி குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கலாம், பணம் கொடுக்கலாம், மனை கொடுக்கலாம், ஆறுதல் கூறலாம். ஆனால் உயிரை திரும்ப கொடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
மக்கள் மீது வரி சுமத்துவது தி.மு.க. அரசின் வழக்கமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் வரி என்ற நிலை இன்றைக்கு இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக ஆசிரியர்கள், தொழிலாளர்கள், அரசுஊழியர்கள் என யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு காரணம் தமிழகத்தில் மக்கள் மனநிலையை பிரதிபலிக்க தவறிய ஆட்சியாளர்கள் தான் எனவே ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் நம்பிக்கைக்கு உரிய கூட்டணியாக விளங்குகிறது.
அரசின் மீது இருக்கிற அதிருப்தியை மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்மறை வாக்கு தமிழகத்திலே நாளுக்கு நாள் அனைத்து துறையிலும் அதிகரித்துக் கொண்டு போகிறது எனவே தமிழகத்தினுடைய முதல் வெற்றி அணியாக செயல்பட தொடங்கி இருக்கிற அ.தி.மு.க, பா.ஜ.க, த.மா.கா மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணிகள் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை மக்களை ஏற்படுத்திக் கொடுப்பார்கள். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு நாளை முதல் கோவை மண்டலத்திலிருந்து தனது மக்கள் சந்திப்பு இயக்கத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க உள்ளார். அவரது சுற்று பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிப்பார்கள் அதன் அடிப்படையிலே கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
காவிரியின் கடைமடை வரை இன்னும் காவிரி நீர் சென்று சேரவில்லை. இதனால் பல இடங்களில் விதைத்த பயிர்கள் கருகி வருகிறது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. எனவே அரசு கடைமடை வரை தண்ணீர் செல்வது உறுதிப்படுத்த வேண்டும். வடிகால் வாய்க்காலைகளை விரைந்து தூர்வார வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நிபந்தனை இன்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.
தமிழகத்தினுடைய இன்றைய பல்வேறு துறையினுடைய முன்னேற்றத்திற்கு தமிழகம் இன்றைக்கு பல்வேறு துறைகளிலே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது முதல் மாநிலமாக செயல்படுவதற்கு அடித்தளமாக செயல்பட்ட முதல்வர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படை தன்மைக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்ட தலைவர் இன்றைக்கும் மாணவர்களுக்கு ரோல் மாடலாக திகழக்கூடிய தலைவர். பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எல்லா வருடமும் அவரது பிறந்த தின விழாவை மிகச் சிறப்பாக ஒரு பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்து அதனை பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த வருடம் சென்னை மாநகராட்சி புரசைவாக்கத்தில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டமாக நடைபெறும் என்று கூறினார்.