செங்குன்றம் செய்தியாளர்
செங்குன்றம் ஜி. என். டி .சாலையில் எம் .என். கண் மருத்துவமனை புதியதாக துவக்கப்பட்டுள்ளது. இதனை சிறப்பு அழைப்பாளர் நடிகர் லிவிங்ஸ்டன் குத்துவிளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
40 வருடங்களாக சிறந்த மருத்துவர்களை கொண்டு தண்டையார்பேட்டை, பெசன்ட் நகர், பெருங்களத்தூர் ஆகிய இடங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய இந்த எம். எண் கண் மருத்துவமனை தற்போது செங்குன்றம் ஜிஎன்டி சாலை காவல் நிலையம் அருகில் புதியதாக துவக்கப்பட்டுள்ளது.
துவக்க விழாவில் செங்குன்றம் சரக காவல் உதவி ஆணையாளர் ராஜாராபர்ட், காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் ,உதவி ஆய்வாளர்கள் ,லயன்ஸ் கிளப் தலைவர் பவானி சங்கர் ,அரிசி மில் உரிமையாளர்கள் சங்க தலைவர் கோபி ,சோழவரம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் கருணாகரன், செங்குன்றம் நார வாரியக்குப்பம் பேரூராட்சிதலைவர் தமிழரசிகுமார் , செங்குன்றம் கிருஸ்துவ ஆலய பேராயர் மில்லண்டன் ராஜரிகம் , ஆயிஷா பள்ளிவாசல் பேஷ்இமாம் மௌலவி காஜா மொய்தீன் ஜமாலி, ஐயப்பன் கோயில் நிர்வாகி தேவன் உட்பட முக்கிய பிரமுகர்கள்
பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.