தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் ஜனசக்தி நகரில் 20 வருடங்களாக அடிப்படை வசதிகள் இல்லை என வலியுறுத்தியும் குடிநீரில் புழுக்கள் உற்பத்தியானதால் 30க்கும் மேற்பட்ட பெண்கள் உடுமலை சாலையில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பத்துக்கு மேற்பட்டோர் உடன் மறியலில் ஈடுபட முயற்சி. காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஜனசக்தி நகர் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் கடந்த 20 வருடங்களாக வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் பொது மக்களுக்கு 20 வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளான குடிநீர் தெரு விளக்கு மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாமல் தினமும் விஷ பூச்சிகள் இருக்கும் சூழலையில் வசித்து வருகின்றனர்.

இதில் உள்ள 70 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த
2018 உடுமலை சாலை ஓரத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. சின்டெக்ஸ் தொட்டிக்கு செல்லும் குடிநீர் தொட்டிக்கு சரிவர குடிநீர் இணைப்பு குழாய்கள் சேதமடைந்ததால் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் இருந்து வருகிறது.

இருப்பினும் பிற்பகுதியில் எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை பன்னிரண்டாயிரம் லிட்டர் தண்ணீரை தனியார் லாரி மூலம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீரில் புழுக்கள் உற்பத்தியாகி குடிநீரை பயன்படுத்த முடியாமல் இருந்து தவித்தனர். குடிநீர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டுமென வலியுறுத்தி பகுதியைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

சம்பவத்தை அறிந்த தாராபுரம் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். நடைபெற்ற விசாரணையில் ஜனசக்தி நகரில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விலைக்கு வாங்கி பயன்படுத்திய தண்ணீரிலும் குழுக்கள் உற்பத்தியானதால் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் ஜனசக்தி நகர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்கனவே பொதுமக்கள் விலைக்கு வாங்கி வந்த 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்படும் எனவும், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிக்கு உடைப்பு ஏற்பட்ட பைப் லைனை சரி செய்து ஒரு சில நாட்களில் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் விட்டு தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்த 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து உடனடியாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெருவிளக்கு இல்லாமல் இருந்ததற்கு உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து மின்கம்பம் அமைத்து தெரு விளக்கு செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தை கட்சியின் தாராபுரம் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் விவசாய பாதுகாப்பு மாநில துணைச் செயலாளர் வேலு சிவகுமார் திருமா ரகு அழகர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *