வில்வா நிறுவனம் சார்பாக நடைபெற்ற இதில் மாடல் துறை சார்ந்த இளம் தொழில் முனைவோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் வில்வா எம்பயர் நிறுவனம் எனும் மாடலிங் துறை தொடர்பான நிறுவனத்தை நந்திதா சுரேஷ் பாபு என்பவர் நடத்தி வருகிறார்..
முழுக்க மாடல் துறை சார்ந்த ஆர்வமுள்ளவர்களின் கனவை நனவாக்கும் முயற்சியில் வில்வா நிறுவனம் தனது முதல் சீசனாக மெட்கிளாம் எனும் நிகழ்ச்சியை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள அதுல்யா கன்வென்ஷன் வளாகத்தில் நடத்தியது..
இதில் மாடல் துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள்,பெண்கள் மட்டுமல்லாது சிறுவர்,சிறுமிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு மேடையில் ராம்ப் வாக் நடந்து அசத்தினர்..இது குறித்து வில்வா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நந்திதா சுரேஷ்பாபு, கூறுகையில்,வில்வா நிறுவனம் மாடலிங் துறை சார்ந்தவர்களுக்கென ஆடைகற்,காலணிகள்,மற்றும் ஜுவல்ஸ் தொடர்பான சாதனங்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்..
மெட்கிளாம் முதல் சீசனில் நடுவர்களாக இந்திய அளவில் பிரபலமான மாடல்கள் பலர் கலந்து கொண்டனர்…