கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கத்தின்
கடலூர் மாவட்ட அவசர கூட்டம் கடலூர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய
கட்டிடத்தில் மாவட்ட தலைவர் இரா .ஜோதி கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இரா.லட்சுமி நாராயணன் மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன்,சக்தியநாதன்,செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தேவ.முரளி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கடலூர் மாவட்ட தலைவர் பழ.முருகபாண்டியன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ஏற்கனவே தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் மாவட்ட கடலூர் தலைவராக உள்ள இரா. ஜோதி கலைச்செல்வன் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளதால் உடனடியாக புதிய மாவட்ட தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஏகோபித்த கருத்துக்கள் அடிப்படையில் ஏக மனதாக கடலூர் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரியும் க.குருநாதன் என்பவர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் வடலூர் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் இரா.விஜயகுமார் என்பவர்மாவட்ட துணைத் தலைவராகவும் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பதிவரை எழுத்தர் என். ரவி மாவட்ட இணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் தேவ.முரளி ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பழ. முருகபாண்டியன் வாழ்த்து தெரிவித்தனர்.மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஏற்கனவே மாவட்ட தலைவராக சிறப்பாக பணியாற்றி பதவி உயர்வு மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ள இரா.ஜோதி கலைச்செல்வனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கணேசன், வேலுசாமி,பீட்டர், அறிவாளன்,
சுதர்சனம் கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், ஆனந்தன் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு கூட்டத்திணை சிறப்பித்தனர். கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் சந்தானம் நன்றி தெரிவித்தார்.