அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் ஆகியவைகள் இணைந்து அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர் பா சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட பொருளாளர் இளவரசு மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன் மணிகண்டன் மாவட்ட இணைச்செயலாளர்கள் பாலு, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர்கள் கண்ணையன் நிர்வாகிகள் ஜெயராமன் புலிகேசி முத்துசாமி உடையார் பாளையம் தமிழ்மணி நல்லதம்பி செல்வமணி மாவட்ட போராட்ட குழு தலைவர் குமாரசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள்.
ஊதிய உயர்வு வெளிப்படை தன்மையுடன் சங்கங்களை வகைப்பாடு செய்யாமல் லாப நட்டங்களை கணக்கில் கொள்ளாமல் 31/3/2018 தேதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையாகக் கொண்டு பணியாளர்கள் 31/3/2023 ஆம் தேதி பெற்று வந்த சம்பளத்தின் மீது இருபது சதவீதம் ஊதிய உயர்வு அனைவருக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது