அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் 2025 – 2026 ஆம் கல்வி ஆண்டை விட 50 மாணவர்களுக்கு மேல் கூடுதலாக சேர்க்கை செய்தமைக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கவிதா அவர்களை பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
இதனை தொடர்ந்து அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் தலைவர் சுதா கல்வியாளர் நல்லப்பன் உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன் சித்ரா ஆகியோர் தலைமை ஆசிரியை கவிதா அவர்களுக்கு சால்வை மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்