திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

ஏற்கனவே 40 ஆண்டுகளுக்கு முன்பு மகா மாரியம்மன் ஆலயத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் பழுதடைந்த நிலையில் கடந்த ஆண்டு இடித்து விட்டு புதிதாக முடி காணிக்கை மண்டபமும், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும் கட்டப்பட்டது. இவை விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

இந்நிலையில் ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் திருமணம் நடத்த அறநிலையத் துறையின் சார்பில் ஒரு திருமண மண்டபம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றி தரவேண்டும் என வலங்கைமான் பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்கள் நிதியிருந்து ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்ட அரசு அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் புதிய திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவில் ஆலய செயல் அலுவலர் கோ . கிருஷ்ணகுமார், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி முன்னிலையில் வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா.சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் க. செல்வம், ரம்ஜான் பீவி சிவராஜ், பேரூராட்சி குடிநீர் வழங்கல் பணியாளர் முருகேசன், சுகாதார மேற்பார்வையாளர் அம்பேத்கர் குமார், 6- வார்டு திமுக பொருளாளர் கோ.சண்முகசுந்தரம் யாதவ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *