108 ஆம்புலன்ஸில் பிரசவம் பெண் குழந்தை பிறந்து தாய் சேய் நலன்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா வேம்பனூர் கிராமத்தில்
வசிக்கும் மகேஸ்வரி 27 கணவர் பெயர் விஜயகுமார் என்ற பெண்மணிக்கு பிரசவவலி என 108 அழைப்பு வந்தது அழைப்பை ஏற்று சூனாம்பேடு 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பார்க்கும் போது பிரசவ வலி அதிகரித்த நிலையில் பெண்மணியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸில் அவசரகால மருத்துவ நூட்புனர் தோழர் ப. அஸ்வின் பிரசவம் பார்த்த போது பெண்மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது பின்பு மருத்துவ சிகிச்சை அளித்து பாதுகாப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தாய், சேய், இருவரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.
இந்தப் பணியை சிறப்பாக செய்த ஓட்டுநர் தோழர் தங்கராஜ் மற்றும் அவசரகால மருத்துவ நுட்புனர் தோழர் ப. அஸ்வின் ஆகிய 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உறவினர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்
வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.