மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளி யில் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர்கள் மாலா, மெர்சி, ராஜேஸ்வரி மற்றும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ஷர்மிளா பானு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் பரதநாட்டியம், குழந்தைகளின் தமிழ் ஆங்கில பேச்சு, மாறுவேடம், கவிதை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி சஹ்ரா நன்றி கூறினார்